அரசுப் பள்ளியில் கராத்தே பயிற்சி  

ஈச்சன்விளை அரசு  உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான இலவச கராத்தே பயிற்சி தொடங்கியது.
குமரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு இலவச கராத்தே  பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வாரத்தில் இருநாள்கள் அளிக்கப்படுகின்றன. ஈச்சன்விளை அரசு உயர்நிலைப்பள்ளியில் கராத்தே பயிற்சியாளர் ஜெயகுமார் மாணவிகளுக்கு பயிற்சியளித்தார்.
ஏற்பாடுகளை தலைமையாசிரியர் எஸ்.செல்வகுமார், உடற்கல்வி ஆசிரியர் லிங்கேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

error: Content is protected !!