‘ஆன்-லைனில்’ துறைத்தேர்வு -மத்திய அரசு முடிவு  

அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வுகளை ‘ஆன்லைன்’ மூலம் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.பதவி உயர்வு, திறன் மேம்பாடு போன்றவற்றிற்காக அரசு ஊழியர்களுக்கு துறைத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகளை மாநில அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமும், மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமும் நடத்துகின்றன.
மின்னாளுமை திட்டத்தின் மூலம் அனைத்து அரசு துறைகளும் ‘ஆன்லைன்’ மூலம் இணைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் பணியாளர் தேர்வாணையங்களும் கணினிமயம் ஆக்கப்பட்டுள்ளன. தற்போது அனைத்து வகை தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் ‘ஆன்லைனில்’ வெளியிடப்படுகின்றன. ஒருசில போட்டித் தேர்வுகளும் ‘ஆன்லைனில்’ நடத்தப்படுகின்றன.2016 முதல் அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வுகளையும் ‘ஆன்லைனில்’ நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்பின் மாநில அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வுகளும் ‘ஆன்லைனில்’ நடத்தப்படும்.
error: Content is protected !!