கணிதப் புதிர் -விடை கூறுங்கள்

ஒரு அரண்மனையில் இருந்து நான்கு பேர் தங்க நாணயங்களைத் திருடிச் சென்றனர் . பங்கிட்டுக் கொள்ள முடியாத சூழ்நிலையில் ஒரு இடத்தில் புதைத்து வைத்து விட்டு தனித் தனியாக எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்கின்றனர் .

இரவு பொழுது வேறு …..

முதலில் ஒருத்தன் வந்து இருக்கும் நாணயங்களை நான்காகப் பிரித்து அதில் ஒரு பங்கை எடுத்துச் செல்கின்றான் ..

இரண்டாமவனுக்கு முதலில் ஒருவன் வந்து போனது தெரியாது .அதனால் மீதமுள்ள நாணயங்களை நான்காகப் பிரித்து அதில் ஒரு பங்கையும் எக்ஸ்ட்ரா ஒரு நாணயத்தையும் எடுத்து செல்கின்றான் ..

மூன்றாமவனுக்கு இரண்டு பேர் வந்து போனது தெரியாது .அதனால மீதமுள்ளவற்றை நான்காகப் பிரித்து அதில் ஒரு பங்கையும் எக்ஸ்ட்ரா இரண்டு நாணயங்களையும் எடுத்துச் செல்கின்றான் ..

நான்காமவன் வரும் போது விடிந்து விடுகிறது ..அதனால் வந்து போன கால் தடங்களைப் பார்த்து விட்டு மீதமுள்ள நாணயங்கள் தனக்குத் தான் என்று நினைத்து எடுத்துச் செல்கின்றான் ..

கேள்வி : இருந்த மொத்த நாணயங்கள் எத்தனை ?? ஒவ்வொருவரும் எத்தனை நாணயங்கள் எடுத்துச் சென்றிருப்பர் ?? ஆனால் அந்த நான்கு பேரும் ஒரே எண்ணிக்கையில் நாணயங்களை எடுத்துச் சென்றிருப்பார்கள் …?

answer

மொத்தம் 16 நாணயங்கள், ஆளுக்கு 4 நாணயங்கள் .

error: Content is protected !!