காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது மறைவு: குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்

 

முப்தி முகமது சயீதின் மறைவுக்கு இதயப்பூர்வமான ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

 

சிறந்த தலைமைப் பண்பால் காஷ்மீர் மக்களின் மனதைத் தொட்டவர் முப்தி முகமது சயீது என்று பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார். சயீதின் மறைவு பேரிழப்பாகும் என்று கூறியுள்ள மோடி, சயீதின் மறைவு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

காஷ்மீர் குறித்த சிக்கலான பிரச்னைகளிலும் தெளிவான புரிதலைக் கொண்டிருந்தவர் முப்தி முகமது சயீது என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் முதலமைச்சர் முப்தி முகமது சயீதின் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!