குமரியில் தேசிய கருத்தரங்கு தொடக்கம்

கன்னியாகுமரியில் பிசியோதெரபி கல்லூரிகள் பங்கேற்ற அறிவியல் கருத்தரங்கு திங்கள்கிழமை தொடங்கியது. இதில், தமிழ்நாடு, புதுதில்லி, பெங்களூரைச் சேர்ந்த 1,200 மாணவர்கள் பங்கேற்றனர்.

தேசிய அளவிலான அறிவியல் கருத்தரங்கு 3 நாள்கள் நடைபெறுகிறது. திங்கள்கிழமை தொடங்கிய இக்கருத்தரங்குக்கு
கன்னியாகுமரி மெடிக்கல் மிஷன் மருத்துவமனை அதிகாரி ராஜேஷ் சத்யா தலைமை வகித்தார். உடையார்விளை சிஎஸ்ஐ
பிசியோதெரபி கல்லூரியின் தாளாளர் சந்திரா, முதல்வர் பேசில் ஜெபஸ்லின்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கருத்தரங்கினை, சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆஸ்டின் குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து கலை, அறிவியல் குறித்த அமர்வுகளில் மாணவர்கள் 100 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.  2 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை உடையார்விளை சிஎஸ்ஐ பிசியோதெரபி கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கு
பல்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன. மாலையில் பொதுக்கூட்டம், கிறிஸ்துமஸ் விழா, 3 ஆம் நாளான புதன்கிழமை கருத்தரங்கு நிறைவு விழா, பரிசளிப்பு விழா ஆகியன நடைபெறும்.

error: Content is protected !!