சமூக வலைதள பிரசாரத்தை கண்காணிக்க தேர்தல் ஆணையம் முடிவு

தமிழக சட்டசபை தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், தேர்தலை நடத்த தேர்தல் அலுவலகம் தயாராகி வருகிறது. அரசியல் கட்சகள், சமூக வலைதளங்ள் மூலம் செய்யும் பிரசாரங்களை கண்காணிக்கவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சந்தித்தார். அப்போது அவர்,

பொங்கல் முடிந்த பின் மத்திய தேர்தல் கமிஷனர் தலைமையிலான குழு தமிழகம் வர உள்ளது. தமிழக ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுடன் மத்திய தேர்தல் குழு ஆலோசனை நடத்தும்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் இதுவரை 43,000 பேர் வாக்காளர் அடையாள அட்டை கோரி விண்ணப்பித்துள்ளனர். 18,000 பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 20ம் தேதி வெளியிடப்படும்.

அரசியல் கட்சிகள் சமூக வலைதளங்கள் மூலம் செய்யும் பிரசாரத்தை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் இருந்து புதிய கண்காணிப்பு மென்பொருள் வாங்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்வு அட்டணை தலைமை தேர்தல் கமிஷனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!