தற்காப்புக் கலை போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு

நாகர்கோவிலில் நடைபெற்ற தற்காப்புக் கலை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வசந்தகுமார் எம்எல்ஏ பரிசு வழங்கிப் பாராட்டினார்.
நாகர்கோவில் லெமூரிய தற்காப்புக் கலை பயிற்சிப் பள்ளியின் சார்பில் மாவட்ட அளவிலான  சிலம்ப போட்டி, களரி மற்றும், ஜிம்னாஸ்டிக் போட்டிகள் அண்ணா விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. குழுப் போட்டிகளாக 6 பிரிவுகளில்  நடத்தப்பட்ட இதில் 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 400- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
இதில் முதல் 3 இடங்களைப் பெற்றவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவரான வசந்தகுமார் எம்எல்ஏ பரிசுகள் வழங்கி வாழ்த்தினார்.

error: Content is protected !!