தெற்காசிய அளவிலான இன்டோ நேபால் பெடரேஷன் கோப்பைக்கான கைப்பந்து போட்டிகளில் சாதனை படைத்த அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு

நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய அளவிலான இன்டோ நேபால் பெடரேஷன் கோப்பைக்கான கைப்பந்து போட்டிகளில் சாதனை படைத்த அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நேபாளத்தில் அண்மையில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணியின் சார்பில், அகஸ்தீசுவரம் விவேகானந்தா கலைக் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர்கள் இதயன் கிறிஸ்துராஜ், சங்கர், சத்தியசீலன் ஆகியோர் பங்கேற்று விளையாடினர். இதில் இந்திய அணி தங்கப் பதக்கம் பெற்றது.
இந்நிலையில் இந்திய அணியில் இடம்பிடித்து சாதனை படைத்த இக்கல்லூரி மாணவர்களை கல்லூரித் தலைவர் துரைசுவாமி, செயலர் சி.ராஜன், பொருளாளர் கணேசன், துணைத் தலைவர்கள் சந்திரமோகன், டி.துரைசாமி, கோபிகிருஷ்ணன், இணைச்செயலர் கே.எஸ்.மணி, செயற்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், மதுசூதனன், கல்லூரி முதல்வர் நீலமோகன், உடற்கல்வி இயக்குநர் ஜாண்ரஸ்கின் மற்றும் பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் பாராட்டினர்.

error: Content is protected !!