தெற்காசிய வாலிபால் போட்டி: சுந்தரனார் பல்கலை. சிறப்பிடம்

சர்வதேச தெற்காசிய வாலிபால் போட்டியில், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.

சர்வதேச தெற்காசிய அளவிலான இந்தோ- நேபாள் பெடரேஷன் வாலிபால் போட்டிகள் நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் கடந்த ஜனவரி மாதம் 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இதில்,  கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள விவேகானந்தா கல்லூரி மாணவர்கள் வ. சங்கர், ஜெ. இதயன் கிறிஸ்துராஜ், இ. சத்ய சீலன்ஆகிய வீரர்கள் 19 வயதிற்கு உள்பட்ட இந்திய வாலிபால் அணியில் விளையாடினர். இந்தப் போட்டியில் அவர்கள் வெற்றி பெற்று தெற்காசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.  இந்த வீரர்களை, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்  கி. பாஸ்கர், பதிவாளர் சே. சந்தோஷ் பாபு, பல்கலைக்கழக விளையாட்டு மைய இயக்குநர்  செ. துரை உள்ளிட்டோர் பாராட்டினர்.

error: Content is protected !!