தேவிகோடு பள்ளியில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி

பளுகல் அருகேயுள்ள தேவிகோடு அரசு பிஎப்எம் தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி சார்பில் தூய்மை இந்தியா மற்றும் பிளாஸ்டிக் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மேல்புறம் வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பு தலைமை வகித்தார்.  வட்டார பொது சுகாதார அலுவலர் வனஜா முன்னிலை வகித்தார்.  உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் ஜஸ்டின்தாஸ், தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் சுபேதர் குட்டி, ஆசிரியர்கள் விஜயன், டேவிட்குமார், மணி ஆகியோர் பேசினர். பேரணி பள்ளி வளாகத்திலிருந்து தொடங்கி நிலமாமூடு, உண்டன்கோடு, புன்னாக்கரை காலனி வழியாக பள்ளி வளாகத்தை வந்தடைந்தது. இதில் பங்கேற்ற மாணவர்கள் தூய்மை இந்தியா, பிளாஸ்டிக் ஒழிப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்திச் சென்றனர்.

error: Content is protected !!