நாகர்கோவிலில் டிச.7 இல் மாற்றுத்திறனாளிகள் தின விழா

  நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளிகள் தினம் வெள்ளிக்கிழமை (டிச.7) கொண்டாடப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குமரி மாவட்டத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் டிச.7 ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, அன்று காலை 10 மணிக்கு நீதிமன்றச்சாலையில் உள்ள எஸ்.எல்.பி. மேல்நிலைப் பள்ளியில் உள்ள அரங்கில் கலை நிகழ்ச்சியும், வேப்பமூடு அருகில் உள்ள எஸ்.எல்.பி. உயர்நிலைப் பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் சிறப்பு வங்கிக் கடன் முகாம், தொண்டு நிறுவனங்கள், சிறப்புப் பள்ளிகளில் மாற்றுத் திறனாளிகள் மூலம் தயாரிக்கப்படும் பொருள்கள் பொதுமக்கள் அறியும் வண்ணம் விற்பனை கண்காட்சி, மாற்றுத் திறனாளிகள் நலத் திட்டம் குறித்த விழிப்புணர்வு பொருள்காட்சியும் நடைபெறவுள்ளது. இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!