பிளஸ் 2 தேர்வு முடிவு மே 17 ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மே 25ம் தேதியும் வெளியாகும் என தமிழக அரசு அறிவிப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 1ம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 13ம் தேதியும் முடிவடைந்தன. ப்ளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 20ம் தேதியே நிறைவடைந்துவிட்டது.

இருப்பினும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ வெளியாகாததால் மாணவர்கள் முடிவை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவு மே 17 ம் தேதி காலை 10.30 முதல் 11 மணிக்குள்ளும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மே 25ம் தேதி காலை 9.31 முதல் 10 மணிக்குள்ளும் வெளியாகும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
error: Content is protected !!