பெண்கள் பாதுகாப்பு… இனி 181 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம்!

சென்னை: தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக 181 என்ற இலவச தொலைபேசி சேவை நாளை துவங்கப்பட உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை தொடங்கி வைக்கிறார்.

பெண்கள் பாதுகாப்புக்காக 181 என்ற இலவச தொலைபேசி சேவையை 4 ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த சேவை, டெல்லி,குஜராத்தை தொடர்ந்து நாளை முதல் தமிழகத்திலும் செயல்படுத்தப்பபடவுள்ளது.

சென்னை, அம்பத்துாரில் உள்ள, ‘அம்மா கால் சென்டர்’ உதவியுடன், இந்த சேவை செயல்படுத்தப்பட உள்ளது. இந்த எண்ணிற்கு வரும் அழைப்புகள் குறித்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு, தகவல் தெரிவிக்கப்படும்.

போலீசார், பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டு, காப்பகங்களில் தங்க வைத்து, மனநலம், மருத்துவம் மற்றும் சட்ட உதவிகளை செய்வர்.

சமூக நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள 24 மணி நேர சேவையை முதலமைச்சர் எடப்பாடி நாளை தொடங்கி வைக்கிறார்.

error: Content is protected !!