மீரான்குளம் பள்ளியில் பழங்கால பொருள்கள் கண்காட்சி

பழங்கால பொருள்கள் மற்றும் நாணயக் கண்காட்சி மீரான்குளம் டிஎன்டிடிஏ நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.
பள்ளியின் சமூக அறிவியல் மன்றம் சார்பில் நடைபெற்ற இக்கண்காட்சிக்கு, வட்டார கல்வி அலுவலர்கள் ரோஸ்லீன் ராஜம்மாள், மீனாட்சி ஆகியோர் தலைமை வகித்தனர். பள்ளித் தாளாளர் பால் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் ராஜ்குமார் வரவேற்றார்.
கிறிஸ்றியாநகரம் உதவி குருவானவர் ஜான் சாமுவேல் தான் சேகரித்திருந்த நாணயங்கள், பழங்கால பொருள்கள் கண்காட்சியாக வைத்திருந்தார். பல்வேறு நாட்டு கரன்சிகள், நாணயங்கள், பழங்கால அளவைகள், ஓலைச்சுவடிகள், எழுத்தாணி உள்ளிட்டவை கண்காட்சியில் இடம்பெற்றன. சுற்று வட்டார பகுதி மாணவ, மாணவிகள் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.
இதில் ராபர்ட் கிறிஸ்டோபர், அல்பர்ட் சாமுவேல், லெனின் ஜெயக்குமார், ஆசீர்வாதபுரம் பள்ளி தலைமை ஆசிரியர் மேரல், அருளூர் பள்ளி தலைமை ஆசிரியர் அகஸ்டின் வில்பிரட், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.

 

error: Content is protected !!