வி.ஏ.ஓ. தேர்வு தேதி மாற்றம்:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தனது 12.11.2015 நாளிட்ட அறிவிக்கை மூலம் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பதவிக்கான நேரடி நியமனத்திற்கு

தேர்வாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அதற்கான இணையவழி விண்ணப்பங்கள் பதிவு செய்ய இறுதி நாள் பெருமழை மற்றும் அதனைத்தொடர்ந்து ஏற்பட்ட அசாதாரண சூழல் காரணமாக 14.12.2015-ல் இருந்து 31.12.2015 என்று மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து பிப்ரவரி 14-ந்தேதி நடக்கவிருந்த தேர்வு அதே மாதம் 28-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!