bala

அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் பரவலாகவும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்,
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவந்த வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்தது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவிழக்கும்.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் பரவலாகவும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புண்டு. புதுச்சேரியை பொறுத்தவரை கன மழை பெய்யலாம். மேலும் விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், கரூர், வேலூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவேளி விட்டு மழை பெய்யும். தமிழகத்தில் அதிகபட்சமாக சோழவரம் மற்றும் மாதவரத்தில் தலா 12 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை என்று எதுவும் இல்லை. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் 17 சதவீதம் குறைந்துள்ளது. சென்னையில் 45 சதவீதம் பருவமழை குறைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!