சென்னை அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின், படுக்கை வசதியுடைய பஸ்களில், திங்கள் முதல் வியாழன் வரை, 10 சதவீத கட்டணத்தை, அரசு குறைத்துள்ளது.தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், ‘கிளாசிக்’ என்ற, கழிப்பறை, படுக்கை வசதியுடைய, ‘ஏசி’ பஸ்; படுக்கை வசதியுடைய, ‘ஏசி’ பஸ்; படுக்கை வசதியுடைய, சாதா பஸ்கள் என, 52 பஸ்கள் இயக்கப்படுகின்றன.தமிழக அரசு, ஜனவரியில், 60 சதவீதத்துக்கும் மேல், கட்டணத்தை உயர்த்தியது.

இதனால், தனியார் ஆம்னி பஸ்களை விட, அரசு பஸ்களில், அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது. எனினும், தனியார் பஸ்களை விட, தரமில்லாத பஸ்கள், தாமதமான சேவை, ஊழியர்களின் ஒத்துழைப்பின்மை உள்ளிட்ட காரணங்களால், பயணியர், பண்டிகை காலங்களை தவிர, மற்ற நாட்களில், தனியார் பஸ்களையே நாடுகின்றனர்.மேலும், தனியார் ஆம்னி பஸ்கள், வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு தவிர, மற்ற நாட்களில், 20 சதவீதம் வரை, கட்டணத்தைக் குறைத்து இயக்கப்படுகின்றன. இதனால், அரசு விரைவு பஸ்கள் வெறிச்சோடி கிடப்பதோடு, பெரும் நஷ்டத்தையும் சந்தித்து வந்தன.இதை சரி செய்ய, அரசு பஸ்களிலும், வார நாட்களில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என, அரசிடம் அதிகாரிகள் வலியுறுத்தி வந்தனர்.

ஜூனில், 515 புதிய பஸ்கள் வாங்கப்பட்டதால், பயணியர் கூட்டம் அதிகரிக்கும் என, அரசு எதிர்பார்த்தது. அதனால், கட்டண குறைப்பு விஷயத்தை தள்ளிப்போட்டது.இந்நிலையில், அரையாண்டு தேர்வு, புத்தாண்டு, பொங்கல் விடுமுறைக்கு முன், கட்டணத்தை, வார நாட்களில் குறைத்தால் தான், அரசு விரைவு பஸ்களை, ஓரளவு லாபத்தில் இயக்க முடியும் என, அதிகாரிகள் வலியுறுத்தினர்; அரசு, அதை ஏற்றது.இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு முதல், படுக்கை வசதியுடைய பஸ்களுக்கு மட்டும், 10 சதவீத கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஏற்கனவே உள்ள கட்டணத்தை விட, 50 முதல், 150 ரூபாய் வரை குறையும் என்பதால், தொலைதுார பயணியர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.எவ்வளவு குறைப்பு?சென்னையில் இருந்து இயக்கப்படும் ஊர்களுக்கான கட்டண விபரம்:ஏ.சி., படுக்கை பஸ்கள்வழித்தடம் /பழைய கட்டணம்/புதிய கட்டணம்திருச்சி/705/635பெங்களூரு/775/700மதுரை/975/880நெல்லை/1,315/1,185போடி/1,110/1,000கீழக்கரை/1,145/1,035-துாத்துக்குடி/1,275/1,145எர்ணாகுளம்/1,505/1355கோவை/1,080/975நாகர்கோவில்/1,475/1,330மைசூரு/1,065/965 படுக்கை வசதியுடைய சாதா பஸ்:-மதுரை/725/630 கழிப்பறை வசதியுடைய, படுக்கை பஸ்கள்:தஞ்சை/410/375சேலம்/400/365திண்டுக்கல்/500/460திருச்சி/390/355எந்தெந்த ஊர்களுக்கு?மதுரை, நெல்லை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கும், பெங்களூரு, எர்ணாகுளம் உள்ளிட்ட, பிற மாநில நகரங்களுக்கும், இந்த பஸ்கள் இயக்கப்படுகின்றன.எவ்வளவு குறைப்பு?சென்னையில் இருந்து இயக்கப்படும் ஊர்களுக் கான கட்டண விபரம்:’ஏசி’ படுக்கை பஸ்கள்வழித்தடம் பழைய கட்டணம் புதிய கட்டணம்திருச்சி 705 635பெங்களூரு 775 700மதுரை 975 880நெல்லை 1,315 1,185போடி 1,110 1,000கீழக்கரை 1,145 1,035-துாத்துக்குடி 1,275 1,145எர்ணாகுளம் 1,505 1355கோவை 1,080 975நாகர்கோவில் 1,475 1,330மைசூரு 1,065 965படுக்கை வசதியுடைய சாதா பஸ்:-மதுரை 725 630கழிப்பறை வசதியுடைய, படுக்கை பஸ்கள்:தஞ்சை 410 375சேலம் 400 365திண்டுக்கல் 500 460திருச்சி 390 355எந்தெந்த பஸ்களில்?’ஏசி’ படுக்கை வசதியுடைய, 34 பஸ்கள்; கழிப்பறை, படுக்கை மற்றும் ‘ஏசி’ வசதியுடைய, 10; ‘செமி ஸ்லீப்பர்’ என்ற, ‘ஏசி’ படுக்கை மற்றும் இருக்கை வசதியுடைய, 6; படுக்கை வசதியுடைய சாதா பஸ்கள், 2 என, மொத்தம், 52 பஸ்களில், இந்த கட்டணக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!