சென்னை: அதிவேக தகவல் தொடர்பு சேவைக்காக, ‘ஜிசாட் – 7 ஏ’ என்ற செயற்கைக்கோளை, ‘இஸ்ரோ’ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், இன்று விண்ணில் செலுத்துகிறது.நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்காக, பி.எஸ்.எல்.வி., மற்றும் ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்கள் வாயிலாக, செயற்கைக்கோள்களை, இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது.அதன்படி, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, ‘ஜி.எஸ்.எல்.வி., – எப்11’ என்ற ராக்கெட் உதவியுடன், ‘ஜிசாட் – 7ஏ’ என்ற செயற்கைக்கோள், இன்று மாலை, 4:10 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான, ‘கவுன்ட் டவுன்’ நேற்று மதியம், 2:10 மணிக்கு துவங்கியது.நாட்டின், அனைத்து பகுதிகளுக்கும், அதிவேகமாக, தகவல் தொடர்பு சேவை கிடைப்பதற்காக அனுப்பப்படும், ‘ஜிசாட் – 7ஏ’ செயற்கைக்கோள், 2,250 கிலோ எடை உடையது.இதன் ஆயுள் காலம், எட்டு ஆண்டுகள்.பாதுகாப்புத் துறையின், தகவல் தொடர்பு சேவைகளுக்காக, இந்த செயற்கைக்கோள் முக்கியபங்காற்றும்.

error: Content is protected !!