தற்போது மாணவர்கள் உணவை ஊட்டி விடும் வகையில், ஒரு ரோபோட்டை கண்டுபிடித்துள்ள அசத்தியுள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பு இன்றை காலத்தில் பெரும் வரவேற்பு பெற்று இருந்தாலும், இந்த கண்டுபிடிக்கு முன்னோடியாக நமக்கு வந்து நிற்பவர் சார்லி சாப்ளின் தான்.

இந்த கண்டுபிடிப்பும் அவரை பார்த்து உருவாக்கப்பட்ட தோ என்று தான் தோன்றுகின்றது. அவர் பயன்பத்திய ரோபோட் போலவே இதுவும் இருக்கின்றது.

சார்லி சாப்ளின் திரைப்படத்தில் வரும் காட்சியை போல இது இருக்கின்றது. அவருக்கு உணவை ஊட்டி விடும் ரோபோ. வாயை துடைப்பது போன்ற காட்சிகள் நகைச்சுவையாக இருக்கும்.

நேரத்தை மிச்சப்படுத்த:நாம் இன்று நவீன உலகத்தில் இயங்கி கொண்டிருக்கின்றோம். இதனால் நேரத்தை மிச்சப்படுத்த நமக்கு தொழில் நுட்பம் வளர்ச்சி அவசியமாகின்றது.

பல்வேறு துறைகளில் ரோபோக்கள் நேரத்தையும் மனித மூலதனத்தையும் மிசப்படுத்தும் நோக்கில் வந்து கொண்டிருக்கின்றன.

ரோபோக்கள்:ரோபோக்கள் என்பது அன்று கடினமாக வேலை செய்யும் இடங்களில் வேலையை சுலபமாக நேர்த்தியாகவும் முடிக்கவும் பயன்படுத்தப்பட்டன. வாகனம் மற்றும் கட்டமைப்பு தொழிற்சாலை, ஆயுத தொழிற்சாலை, இரும்பு உருக்கும் தொழிற்சாலை, தற்போது உணவு மற்றும் பேக்கிங் செய்யும் வரை ரோபோக்கள் வந்து விட்டன.

உணவு சமைக்கும் ரோபோ:வெளிநாடுகளில் பெரும்பாலான ஹோட்டல்களில் உணவு சமைக்கவும் ரோபோக்கள் வந்து விட்டன. அவைகள் மிகவும் தொழில் நுட்ப ரீதியாகவும் அவ்வளவு நேர்த்தியாகவும் உணவை சமைத்து விடுகின்றன.

சமைத்த உணவை தற்போது, எவ்வளவு பக்குவமாகவும் விதவிதமாகவும் அடுக்கி வைக்கின்றன. இந்த காட்சிகள் நம்மை புல் அரிக்க வைக்கின்றது.

ஜப்பான், அமெரிக்கா, கொரியா:ஜப்பான், அமெரிக்கா, கொரியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இந்த ரோபோக்களின் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. முன்பு எல்லாம் ரோபோக்கள்
வெளிநாடுகளில் மட்டும் இருந்தாலும், பன்னாட்டு கம்பெனிகளின் வருகையால், இந்தியாவுக்குள் நுழைந்து தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன.

உணவு சமைக்கும் துறை:உணவு சமைக்கும் துறையில், ஜப்பான், அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளில் வந்தாலும், இந்தியாவில் உணவு சமைக்க பெரிதாக ரோபோக்கள் பயன்படுத்த விட வில்லை என்றும் கூறலாம்.

வெளிநாடுகளில் விதவிதாமாகவும் ரோபோக்கள் அழகாக ரோபோக்கள் உணவை சமைத்து விடுகின்றன. கறி வெட்டு வது முதல் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கோயமுத்தூர் ரோபோ:இந்தியாவை பொறுத்தவரை உணவு சமைப்பதுக்கு என்றும் ரோபோக்கள் இல்லாத போதும், உணவுத்துறையில், பயன்படுத்தும் ரோபோக்கள் இருக்கின்றன.
அதுவும் ரோபோ சமைத்த உணவை ஆடர் எடுத்தும் அற்புதமாக பறிமாறுகின்றது.

அதுவும் ரோபோ இருக்கும் இடம் தமிழ்நாட்டில். நம் கோவையில் தனியார் ஹோட்டல் ஒன்றில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இதை ஏராளமான வாடிக்கையாளர்களுக்கும் ரோபோவுடன் செல்பி எடுத்துச் செல்கின்றனர்.

உணவு ஊட்டி விடும் ரோபோ:சார்லி சாப்ளின் நசைச்சுவை படத்தில் வரும் காட்சியை போல தற்போது சாப்பிடும் வகையில் ரோபோட் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். கல்லூரி மாணவர்கள்.
இன்றைய உலகத்தில் இது புரட்சி செய்யும் என்றாலும் இந்த ஐடியாவுக்கு அச்சாரமிட்டவராக தான் சேகாத்தில் இருந்தாலும், சிரிப்பை கொடுத்த மகான் சார்லி சாப்ளின் தானாக இருக்க முடியும்.

ஆர்எம்ஐடி மாணவர்கள்:ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல ஆர்எம்ஐடி பல்கலைக்கழக மாணவர்கள், தங்களது பட்டயப் படிப்பிற்காக சமர்ப்பித்துள்ள இந்த உணவு ஊட்டி விடும் ரோபோ சர்வதேச தொழில்நுட்ப உலகை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

நல்ல ஐடியா:வேலை நேரத்தில், பணியாளர்கள் உணவு சாப்பிடுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதாக பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களின் குற்றச்சாட்டாக உள்ளன. அவர்களது தேவைக்கு ஏற்றவாறு இந்த ரோபோவின் செயல்பாடு வடிவமைக்கப்பட்டுள்ளது.

பணியாளர்களுக்காக வடிவமைப்பு:பணியாளர்கள் நமக்கு உணவு தேவைப்படும் நேரத்து ரோபோக்களிடம் தெரிவித்துவிட்டால் போதும். சாப்பாட்டு நேரம் வரும் போது, ரோபோ தன் கையால் வந்து உணவு ஊட்டும். இதனால் பணியாளர்கள் வேலை பார்த்துக் கொண்டே சாப்பிட முடியும்.

அம்மாவை நினைவுக்கு வரும்:நமது தாய் எவ்வாறு உணவு சமைத்த பிறகு நமக்கு ஊட்டி விடுவாரோ அதுபோன்று இந்த ரோபோட்கள் உணவை ஊட்டி விடும். தாய்யை போன்று இது எதிர்காலத்தில் அக்கரையாகவும் நம்மை அரவணைத்து ஊட்டி விடலாம்.

நமக்கு இந்த ரோபோக்கள் எதிர்காலத்தில் அன்னயாகவும் தெரியலாம். அவைகளை கண்டு கண்ணீரிலும் வரலாம். இவை எல்லாம் ஏஐ போட்டுகளலால் சாத்தியம்.

error: Content is protected !!