பெய்ஜிங்: உலகின் முதல் அதிவேக கடல் சுரங்கப்பாதை ரயிலை உருவாக்கச் சீனா திட்டமிட்டுள்ளது.

தற்பொழுது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைச் சீனா வெளியிட்டுள்ளது.

கடலுக்கடியில் அதிவேக ரயில்அதிவேக ரயில்களின் பிறப்பிடமான சீனா, தற்பொழுது கடலுக்கடியில் செல்லும் அதிவேக ரயிலைத் தயாரிக்கவுள்ளதென்ற செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நீங்போ – சோஹுஹான்இந்த ரயில் திட்டம் நீங்போ நகரத்திலிருந்து சோஹுஹான் தீவுக்கிடையில் மொத்தம் 70.92 கிலோ மீட்டர் தூரத்தை, இந்த ரயில் திட்டம் இணைக்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

70.92 கிலோ மீட்டர் தூரம்இந்த மொத்த தூரமான 70.92 கிலோ மீட்டர் தூரத்தில் 16.2 கிலோ மீட்டர் தூரம் கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைத்து இருநகரத்தையும் இணைக்குமென்றும் சீனா தெரிவித்துள்ளது.

16.2 கிலோ மீட்டர் கடலுக்கடியில் சுரங்கப்பாதைஉலகின் முதல் கடல் சுரங்கப்பாதை ரயில் நீங்போ நகரத்திலிருந்து சோஹுஹான் தீவிற்கிடையில் 16.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடலுக்கடியில் சுரங்கப்பாதை அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு மிக விரைவில் திறக்கப்படுமென்று சீனா தெரிவித்துள்ளது.

250 கிலோ மீட்டர் வேகம்உலகின் முதல் கடல் சுரங்கப்பாதை ரயில் மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்படி உருவாக்கப்படவுள்ளதாகவும், இந்த அதிவேக ரயில் வெறும் 30 நிமிடத்தில் நீங்போ நகரத்திலிருந்து சோஹுஹான் தீவை சென்றடையுமென்று தெறிவிக்கப்பட்டுளள்து.

error: Content is protected !!