உலக பாரம்பரிய வாரம் இன்று முதல் நவ.25 வரை கொண்டாடப்படுவதால், மாமல்லபுரத்தில் உள்ள கலைச் சின்னங்களை இன்று ஒருநாள் மட்டும் இலவசமாக கண்டு ரசிக்கலாம் என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
மாமல்லபுரத்தில், உலக பாரம்பரிய வாரம் கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப் படுகிறது. மேலும், தொல்லியல் துறை சார்பில் பாதுகாத்து பராமரிக்கப்பட்டு வரும் கடற்கரை கோயில், ஐந்துரதம், கிருஷ்ணன் மண்டபம், புலிக்குகை, அர்ஜூனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உட்பட பல்வேறு குடவரை சிற்பங்களை, இன்று ஒருநாள் கட்டணமின்றி சுற்றுலா பயணிகள் இலவசமாகக் கண்டு ரசிக்கலாம் என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.மேற்கண்ட கலைச் சின்னங்களை கண்டு ரசிக்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ரூ.600 மற்றும் உள்ளூர் சுற்றுலா பயணிகளுக்கு ரூ.40 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
error: Content is protected !!