ஈசிஎன்ஆர் பாஸ்போர்ட் பெறுவதற்கான வழிமுறைகள் சுலபமாக்கப்பட்டுள்ளன என்று, மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் எஸ். மணீஸ்வர ராஜா தெரிவித்துள்ளார்.

         இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேலைக்காக வெளிநாடு செல்லும் பொதுமக்களிடம் ஈ.சி.என்.ஆர். (குடியுரிமை ஆய்வுச்சான்று அவசியம் இல்லை) பாஸ்போர்ட் பெறுவதற்கு தனியார் முகவர்கள் அதிகக் கட்டணம் வசூலிக்கின்றனர் என்ற புகார் எழுந்துள்ளது.   அவ்வாறு ஏமாற்றப்படும்பட்சத்தில், அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திலோ புகார் அளிக்கலாம்.
ஈசிஎன்ஆர் பாஸ்போர்ட் பெற அரசு பொது சேவை மையம் மூலம் ஆன்-லைனில் பதிவு செய்யலாம். இதற்கு, ரூ.1,655 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பதிவு செய்யப்படும் விண்ணப்பத்தை அருகில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களுடன் வருமான வரி செலுத்திய ரசீது, நிரந்தரக் கணக்கு வைப்பு எண், வேலை தொடர்பான ஆவணங்களையும் இணைத்து வழங்கவேண்டும்.
ஈசிஎன்ஆர் பாஸ்போர்ட் பெறுவது தொடர்பான கூடுதல் விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
error: Content is protected !!