பள்ளி மாணவர்களுக்கான, ‘கலா உத்சவ்’ போட்டி, இந்த ஆண்டு,’நாட்டுப்புறம், கலை மற்றும் பழங்குடியினர் பாரம்பரியம்’ என்ற தலைப்பில் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு
ஆண்டும், மத்திய அரசின் சார்பில், கலா உத்சவ் என்ற கலாசார போட்டி, மாணவர்களுக்கு நடத்தப்படும்.

இதில், தேசிய அளவில் முதலிடம் பெறுபவர் அல்லது அணிக்கு, ஐந்து லட்சம் ரூபாய்; இரண்டாம் இடத்திற்கு, மூன்று லட்சம் ரூபாய் மற்றும் மூன்றாம் இடம் பெறுபவருக்கு, இரண்டு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்.இந்த ஆண்டு, கலா உத்சவ் போட்டி மற்றும் விழா, ‘நாட்டுப்புறம், பாரம்பரிய கலை மற்றும் பழங்குடியினர் பாரம்பரியம்’ என்ற தலைப்பில் நடத்தப்பட உள்ளது என, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது; மேலும், ‘ஆன்லைன்’ போட்டியும் அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். முதலில் மாவட்ட அளவிலும், பின் மாநில அளவிலும், அதில் வெற்றி பெறுவோர், தேசிய அளவிலும் தேர்வு செய்யப்படுவர். இந்த போட்டிகள் குறித்த கூடுதல் தகவல்களை,http://www.kalautsav.inஎன்ற இணையதளத்தில் அறியலாம்.

error: Content is protected !!