கன்னியாகுமரியில் ரோப்கார் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், திருநெல்வேலியைச் சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரிகள் முக்கடல் சங்கமம் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

 சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு ஆண்டுக்கு 70 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவும், பயணிகள் மூன்று நாள்கள் வரை தங்கியிருந்து சுற்றுலாப் பகுதிகளைப் பார்வையிட்டுச் செல்லும் நோக்கத்திலும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் அண்மையில் நாகர்கோவிலில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின்போது, கன்னியாகுமரியில் ரூ. 120 கோடி மதிப்பில் ரோப்கார், விவேகானந்தர் மண்டபம் – திருவள்ளுவர் சிலை இடையே இணைப்புப் பாலம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து, ரோப்கார் திட்டத்தை தொடங்குவதற்கு முன்னேற்பாடாக, அதற்கான இடத்தை தேர்வு செய்யும் பொருட்டு மும்பையில் இருந்து சிறப்பு நிபுணர்கள் குழுவினர் மற்றும் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் ஆகியோர் கன்னியாகுமரி பூம்புகார் படகுத்துறை, காமராஜர் மணிமண்டபத்தின் மேற்குப் பகுதி ஆகிய இரு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி காமராஜர் மண்டபத்தில் இருந்து முக்கடல் சங்கமம் வரையிலான பகுதியில் திருநெல்வேலியைச் சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரிகள் ரோப்கார்   சர்வேயர் கிருஷ்ணன், உதவி சர்வேயர் சூர்யா மற்றும் ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

error: Content is protected !!