கன்னியாகுமரி மாவட்டத்தை பிறப்பிடமாக கொண்ட  கலை, எழுத்து, அறிவியல், ஆராய்ச்சி மற்றும் படைப்பாளிகளை சாதி, மதம், மொழிக்கு அப்பாற்பட்டு  ஊக்குவிக்கும் விதமாக டிச.16 ஆம் தேதி தக்கலையில்  நடைபெறும்  மலையாள அக்ஷரலோகம் 10-வது ஆண்டு விழாவில்  விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இவ்விழா, தக்கலை தனியார் திருமண மண்டபத்தில்  ஞாயிற்றுகிழமை மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. இதன் நோக்கம்  மாவட்டத்தை சேர்ந்த கலைஞர்கள், அறிவியல் ஆய்வாளர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் படைப்பாளிகளை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிப்பதுடன்  வெளி உலகத்திற்கு  அடையாளம் காட்டுவதேயாகும். இவ்விழாவில் மலையாள கவிஞர்  பாகோடு நாராயணபிள்ளைக்கு விருது வழங்கப்படவுள்ளது. விருதை தொல்பொருள் மற்றும் வரலாற்று ஆய்வாளர் டாக்டர் பத்மநாபன் வழங்கவுள்ளார்.
இந்நிகழ்ச்சியில்  மலையாள அக்ஷரலோகம்  கெளரவத் தலைவர்  ஆனந்தபாய் தங்கச்சி, கேரள அருங்காட்சியக  நிர்வாக இயக்குநர் சந்திரன்பிள்ளை,  செயலர் ஜெயசந்திரன்,  குழித்துறை மலையாள சமாஜம் பத்திரிகை ஆசிரியர் கோபகுமார்,   நாகர்கோவில் மித்ரம் அமைப்பின் தலைவர் கே.கே. குமார்,  கவிஞர் காரிக்கம் ஸ்ரீகுமார், என்.ஐ. அறிவியல்  கல்லூரி மலையாளத்துறை தலைவர் பிரமிளா மகேஷ்,  உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமைப்பின் இணைசெயலர் ராமதாஸ், மற்றும் லலிதாவிலாசினி, கல்வி அறகட்டளை உறுப்பினர் விஜயன்பாபு, வினோத்குமார், ஆகியோர் செய்துவருகின்றனர்.

error: Content is protected !!