பொதுத் தேர்வுக்கான தேதி, இன்னும் அறிவிக்கப்படாததால், சி.பி.எஸ்.இ., மாணவர்கள் குழப்பத்துக்கு ஆளாகியுள்ளனர்.தமிழக பாட திட்டத்தில், பொதுத் தேர்வுகள் எப்போது நடக்கும்; எப்போது தேர்வு முடிவுகள் வெளியாகும் என, கல்வி ஆண்டு துவங்கும் போதே, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, மாணவர்கள் திட்டமிட்டு படிக்க, வசதியாக உள்ளது. ஆனால், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், பொது தேர்வுக்கான தேதி, இன்னும் அறிவிக்கப்படவில்லை.டில்லி உயர் நீதிமன்ற உத்தரவின்படி, தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி, முடிவு களை அறிவிக்க, சி.பி.எஸ்.இ.,க்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, தொழிற்கல்வி மாணவர்களுக்கு பிப்ரவரியிலும், மற்ற மாணவர்களுக்கு மார்ச்சிலும், தேர்வுகள் துவங்கும் என, சி.பி.எஸ்.இ., ஏற்கனவே அறிவித்தது.ஆனால், தேர்வுக்கான தேதி, இன்னும் அறிவிக்கப்படவில்லை. 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2க்கு, எப்போது தேர்வுகள் துவங்கும் என்பது தெரியாமல், மாணவர்கள் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர். தேர்வுகள் துவங்கும் தேதியை, விரைந்து அறிவித்தால், திட்டமிட்டு படிக்க வசதியாக இருக்கும் என, மாணவர்கள் தெரிவித்துள்ளனர். – நமது நிருபர் –

error: Content is protected !!