செவ்வாய் கிரகத்தில் வீசும் காற்றின் ஓசையைக் கேட்டது நாசாவின் ஆய்வுக் கலத்தில் ஓர் அங்கமாக உள்ள பிரிட்டன் சாதனம்.

செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்கு நாசா அனுப்பிய ‘இன்சைட் லேண்டர்’ ஆய்வுக் கலத்தில் இணைத்து அனுப்பப்பட்ட பிரிட்டிஷ் பூகம்ப ஆய்வுக் கருவியான சீஸ்மோமீட்டர், ஆய்வு வாகனத்தின் சோலார் பேனல்களை கடந்து சென்ற செவ்வாய் கோளின் காற்றின் ஓசையைப் பதிவு செய்துள்ளது.

ஆய்வுக் கலத்தின் பக்கவாட்டுகளில் அமைந்துள்ள சோலார் பேனல்கள் சிறப்பான ஒலி வாங்கிகள் என்கிறார் பேராசிரியர் டாம் பைக். இவர் லண்டன் இம்பீரியல் கல்லூரியில் இருந்து இந்த பூகம்ப ஆய்வுக் கருவி சோதனையை வழிநடத்துகிறார்.

“இன்சைட் ஆய்வுக் கலம் தமது காதுகளைக் கூர்மையாக வைத்துக் கேட்பதைப் போன்றது இது”.

இந்த காற்றால் ஏற்பட்ட அதிர்வை கொடிக் கம்பத்தில் உள்ள கொடி காற்றில் அசைவதுடன் ஒப்பிடுகிறார்.

error: Content is protected !!