முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15-ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட வேண்டும் என தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த நாளையொட்டி தமிழக அரசின் உத்தரவின்பேரில் 2012-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சிறந்த பள்ளிகளை ஊக்குவிப்பதற்கான பரிசளிப்புத் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த நிதியின் மூலம் மாவட்டங்கள்தோறும் 2 பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதியினை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த ஆண்டும் அனைத்து மாவட்டங்களிலும் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட வேண்டும் என பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று தொடக்கக் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
error: Content is protected !!