நாகர்கோவிலில் முன்னாள் படைவீரர்களுக்கான இலவச மருத்துவ முகாம் வியாழக்கிழமை (டிச.13)  நடைபெறுகிறது.
இது குறித்து, ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே  வெளியிட்ட செய்திக்குறிப்பு: குமரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தோர்பயன்பெறும் வகையில் சாந்திகிரி ஆஸ்ரமம் ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் டிச. 13 ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 9.30 முதல் 1.30 மணி வரை கோட்டாறு முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் நடைபெறுகிறது.
முகாமில், ஆலோசனை பெறுவதுடன் தொடர் சிகிச்சை பெறும் முன்னாள் படைவீரர்கள்,  அவர்களை சார்ந்தோர்களுக்கு
மருத்துவ செலவில் 15 சதவீதம் சலுகை வழங்கப்படும்  என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. முகாமில் எலும்பு தேய்மானம், மூட்டு வலி, பக்கவாதம், சைனஸ், காது மூக்கு தொண்டை பிரச்னை, நுரையீரல், முடி உதிர்தல், குடல் புண், வாயுத்தொல்லை, சிறுநீரக கல், மூலம், தோல் நோய், வெரிக்கோஸ் வெயின், சர்க்கரை நோய், ரத்தஅழுத்தம் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!