திருப்பதியில் 2018ஆம் ஆண்டுக்கான தேசிய ஜூனியர் தடகள விளையாட்டுப் போட்டிகள் (நிட்ஜாம்) கோலாகலமாகத் தொடங்கின.

 திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தாரக ராமா மைதானத்தில் 16ஆவது மாவட்ட அளவிலான ஜூனியர் தேசிய தடகள விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை காலையில் தொடங்கின.
டிச.3ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த விளையாட்டுப் போட்டிகளை ஆந்திர அமைச்சர் தொழில்துறை அமைச்சர் அமரநாத் ரெட்டி தொடங்கி வைத்தார்.
நாட்டில் உள்ள 28 மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் இப்போட்டியில் பங்கேற்கின்றனர். தமிழ்நாட்டின் 31 மாவட்டங்களைச் சேர்ந்த 309 வீரர்கள், வீராங்கனைகள் இதில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது. போட்டியின் தொடக்கத்தில் அனைத்து மாநில விளையாட்டு வீரர்களையும் அறிமுகப்படுத்தும் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஹாக்கி, குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

error: Content is protected !!