இந்தியப் பெருங்கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவி வருவதால் ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட தென் தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (டிச. 7) பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியது: இந்தியப் பெருங்கடலில் மாலத் தீவு, லட்சத்தீவு பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை ஆகிய தென் மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (டிச.7) பரவலான மழைக்கு வாய்ப்புள்ளது. வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பில்லை. சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
மரக்காணத்தில் 80 மி.மீ.மழை: தமிழகத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டம், மரக்காணத்தில் 80 மி.மீ., கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் 70 மி.மீ., தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தலா 40 மி.மீ., நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் 30 மி.மீ.மழை பதிவானது.

error: Content is protected !!