தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை‌ பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கஜா புயலுக்கு பிறகு தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. பின்னர் அது வலுகுறைந்து தமிழகத்தின் உள் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நீடித்தது. இதன் காரணமாக விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நாமக்கல், உள்ளிட்ட உள்மாவட்டங்களிலும், டெல்டா பகுதிகளிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்தது. சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை இடைவெளிவிட்டு சிலமுறை கனமழையும் பெய்தது.

இந்நிலையில் தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் டெல்டா பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் சென்னையைப் பொறுத்தவரை வான‌ம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனக் கூறப்பட்டுள்ளது

error: Content is protected !!