புதுடில்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ள, வி.ஐ.பி.,க்கள், காத்திருப்பதை தவிர்க்கும் வகையில், சிறப்பு ஸ்டிக்கர் தரப்பட உள்ளது.தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில், கட்டணம் செலுத்துவதில், எம்.பி.,க்கள் உட்பட, பலருக்கு விலக்கு அளிக்கப்பட்டுஉள்ளது. எம்.பி.,க்களுக்கு டெல்லியில் ஒரு வாகனத்துக்கும், சொந்த தொகுதியில், ஒரு வாகனத்துக்கும் என, சிறப்பு பாஸ் அளிக்கப்பட்டுள்ளது. சுங்கச் சாவடிகளில், இந்த பாஸை காட்டிவிட்டு அவர்கள் செல்லலாம். இதற்கிடையே, சுங்கச் சாவடிகளில் காத்திருப்பதை குறைக்கும் வகையில், ‘பாஸ்டேக்’ என்படும், முன்னதாகவே பணம் செலுத்தி, சிறப்பு ஸ்டிக்கரை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த ஸ்டிக்கர் உள்ள வாகனங்கள், சுங்கச் சாவடிகளில் கடக்கும்போது, அது ஸ்கேன் செய்யப்பட்டு, இருப்பில் உள்ள பணம், கழித்துக் கொள்ளப்படும்.தற்போது, இதுபோன்ற, பாஸ்டேக் சிறப்பு ஸ்டிக்கரை, கட்டண சலுகை பெற்றுள்ள, வி.ஐ.பி.,க்களுக்கும் அளிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:கட்டண சலுகை பெற்றிருந்தாலும், அதற்கான பாஸை, சுங்கச் சாவடிகளில் காட்ட வேண்டிய அவசியம் உள்ளது.இதனால், வி.ஐ.பி.,க்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. அதை தவிர்க்கும் வகையில், அவர்களுக்கு இந்த பாஸ்டேக் சிறப்பு ஸ்டிக்கர் அளிக்கப்படுகிறது. இந்த வகையில், 12 ஆயிரம் ஸ்டிக்கர்கள் வழங்கப்பட உள்ளன.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

error: Content is protected !!