கோவை: பாரதியார் பல்கலை தமிழ் துறை சார்பில், தொழில்நுட்பத்தின் வழியாக இலக்கியம் கற்பித்தல் என்ற தலைப்பில் பயிரலங்கு நேற்று துவங்கியது.

இரண்டு நாள் நடக்கும் இப்பயிலரங்கில், பல்கலை தமிழ் துறை தலைவர் ஜெயா பேசுகையில், வாழ்க்கையின் எதிர்காலத்தை பற்றிய திட்டமிடல் குறித்து கூறியவர், பாரதியார். ஒவ்வொருவரின் வாழ்விலும் பாரதியின் தாக்கம் இருக்கும். பாரதியாரின் பாடலையும், அவர் கூறிய கருத்துகளை அனைவரும் படிக்க வேண்டும்.

ஆனால், அவை இன்றளவும் மதிப்பூட்டப்படாமல் ஆவணக்காப்பகத்திலேயே கிடப்பில் உள்ளது. தற்போது உள்ள நவீன முறைக்கு ஏற்ப, அனைவரும் எளிமையாக கற்றுக்கொள்ளும் வகையில்,தொழில்நுட்பத்தில் மூலமாக கணினிமயமாக்க உள்ளோம். அதற்கான, பயிற்சி வகுப்பில் முதல்கட்டமாக பாரதியின் குயில் பாட்டு, கணினிமயமாக்கவுள்ளோம், என்றார்.

பல்கலை பதிவாளர் செந்தில் வாசன், துணை வேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் கமலக்கண்ணன்,இந்திய மொழிகளின் தரவக தலைவர் ராமமூர்த்தி, பேராசிரியர் சித்ரா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!