ஸ்வீடன் விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக ஆண்டு தோறும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் நேற்று சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம், நார்வே தலைநகர் ஆச்லோவில் நடந்த விழாவில் வழங்கப்பட்டன.

அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் நார்தாஸ், பால் ரோமருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசும், அமெரிக்காவைச் சேர்ந்த பிரான்சஸ் அர்னால்டு, ஜார்ஜ் பி.ஸ்மித், கிரகோரி விண்டர் ஆகியோருக்கு வேதியலுக்கான நோபல் பரிசுகள் வழங்கப்பட்டன.அமெரிக்காவைச் சேர்ந்த டோனா ஸ்ட்ரிக்லேன்ட், ஆர்தர் ஆஷ்கின், பிரான்சை சேர்ந்த ஜெரால்ட் மொரு ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

மருத்துவத்துக்கான நோபல் பரிசை அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் பி.அலிசன், ஜப்பானைச் சேர்ந்த டசூகூ ஹோஞ்சோவுக்கும், அமைதிகான நோபல் பரிசு இராக் போரால் பாதிக்கப்பட்ட நாடியா முராத், காங்கோவைச் சேர்ந்த மருத்துவர் டெனிஸ் முக்வேகாய் ஆகியோருக்கு அளிக்கப்பட்டன.

ஆல்பிரட் நோபலின் நினைவு நாளான டிசம்பர் 10-ம் தேதி நோபல் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நேற்று விருது விழா நடைபெற்றது. அங்கு நடந்த விழாவில் பொருளாதாரம், வேதியியல், இயற்பியல், மருத்துவம் ஆகிய பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு நோபல் பரிசுகள் வழங்கப்பட்டன.

அந்தந்த துறையின் நோபல் பரிசு தொகை தலா ரூ.7.5 கோடி ஆகும். இதனை விஞ்ஞானிகள் பகிர்ந்து கொண்டனர்.

நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடந்த விழாவில் அமைதிக்கான நோபல் பரிசு நாடியா முராத்துக்கும் டெனிஸ் முக்வேகயுக்கும் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படவில்லை.

மருத்துவர் டெனிஸ் முக்வேகய் பேசியபோது, “போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கான பெண்களும் சிறுமிகளும்பலாத்காரத்தால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களைக் காப்பாற்ற சர்வதேச சமுதாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற நாடியா முராட் பேசியபோது, “தீவிரவாதிகளின் பிடியில் இன்னும் நூற்றுக்கணக்கான பெண்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

error: Content is protected !!