பல்கலை கழகங்களில் பி.எஸ்சி., மற்றும் எம்.எஸ்சி., யோகா பாட பிரிவுகளை துவக்க, பல்கலை கழக மானியக்குழுவான, யு.ஜி.சி., திட்டமிட்டுள்ளது.

யோகாவுக்கு உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே மவுசு அதிகரித்து வருகிறது; பிரதமர் நரேந்திர மோடியும் யோகாவை பிரபலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டில், சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. அப்போது, நாடு முழுவதும் பெரிய அளவில், ஒரே நாளில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், யோகாவை கல்வியாக அங்கீகரித்து பல்கலை கழகங்களில், பாடப்பிரிவுகள் மற்றும் துறைகளை ஏற்படுத்த, யு.ஜி.சி., நடவடிக்கை எடுத்து வருகிறது. வரும் கல்வியாண்டில், நாடு முழுவதும் உள்ள, 40 மத்திய பல்கலை கழகங்களில் பி.எஸ்சி., மற்றும் எம்.எஸ்சி., யோகா பாடப்பிரிவுகள் துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது.இதன்பின், மத்திய அரசின் நிதியுதவி பெறும் மாநில பல்கலை கழங்களிலும், யோகா பாடப்பிரிவுகள் துவங்கப்பட உள்ளன.

error: Content is protected !!