அறிவியல் கண்காட்சி,  கலைத் திறன் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள் என முப்பெரும் விழாவில்  பேசிய பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். இவ் விழாவில் பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி ஆகியோர் பங்கேற்று அறிவியல் கண்காட்சியைத் தொடக்கி வைத்தனர்.

இதில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியது:  ஆற்றலும்,  ஒழுக்கமும் கொண்ட சிறந்த கல்வியை மாநில அரசு அளித்து வருகிறது.  ஏழை இல்லா தமிழகத்தை கல்வியால் மட்டும்தான் உருவாக்க முடியும் என்பதால்தான் ரூ.28,000  கோடி அளவுக்கு நிதியை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கீடு செய்தார்.  தற்போதைய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்  ரூ.30,000 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளனர்.

தமிழகத்தில் பிளஸ் 1,  பிளஸ் 2 பயிலும் 11 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அடுத்த மாத இறுதிக்குள் மடிக்கணினி வழங்கப்படும் என பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

error: Content is protected !!