சென்னை: தென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதால் தமிழகத்தில் 4 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வும் மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியதாவது: அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இது மேற்கு நோக்கி நகரும் பட்சத்தில் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தில் டிச. 4, 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் மழை பெய்ய துவங்கும். டிச. 4 ஆம் தேதி கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில், உள்மாவட்டகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்யும்.

சென்னையைப் பொருத்தவரை இன்றும் நாளை மற்றும் நாளை மறுநாள் (டிச.2,3) சில இடங்களில் மிதமான மழையும், 4, 5, 6 ஆம் தேதிகளில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது. மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை என தெரிவித்தார்.
error: Content is protected !!