சென்னையில் வாழும் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் தாழ்த்தப்பட்ட நகர்ப்புற சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு, சென்னை மாநகராட்சியுடன் இணைந்து பிரிட்டிஷ் கவுன்சில் டெவலபிங் இன்னோவேடிவ் ஸ்கூல்ஸ் இன் சென்னை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
ஆசிரியர் கல்வியாளர் பயிற்சி 
பிப்ரவரி 1- 5ம் தேதி வரை, ஐந்து நாட்கள் நடைபெற்ற ஆசிரியர் பயிற்சியின் அடிப்படைகள் என்னும் பயிற்சியில், அக்டோபர் மற்றும் நவம்பர் 2015ல் நடத்தப்பட்ட கணினி சார்ந்த மொழி தேர்வில், தேர்வு செய்யப்பட்ட 22 ஆசிரியர் பயிற்சியாளர்களுக்கு, அவர்களின் பயிற்சி திறன்களை மேம்படுத்தவும் மற்றும் 120 இடைநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு இப்பயிற்சியை கொண்டுசெல்லவும் பயிற்சி வழங்கப்பட்டது.
மேலும், பிரிட்டிஷ் கவுன்சில் சவுத் இந்தியாவின் இயக்குனர் மேக்-வே பார்க்கர் பேசுகையில்;
ஆசிரியர் பயிற்சியாளர்கள் தங்களது பயிற்சித் திறன்களை நங்கு கற்றுக்கொள்ள பிரிட்டிஷ் கவுன்சில் சென்னை மாநகராட்சியுடனும் மற்றும் மாக் அர்த்தர் அறக்கட்டளையுடனும் இணைந்து பங்காற்றி வருகின்றது. ஆசிரியர் கல்வியாளர் பயிற்சியைத் தொடர்ந்து, 120 மாநகராட்சி மேல்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு இப்பயிற்சியை ஆசிரியர் பயிற்சியாளர்கள் கொண்டுசேர்ப்பார்கள்.
இது புதிய கல்வி ஆண்டிலிருந்து துவங்கப்படும். அதுமட்டுமின்றி மாணவர்கள் கிளப், கிளப் தலைவர்களுக்கும் தலைமை ஆசிரியர்களுக்கும் பயிற்சி தருவது போன்றவை புதிய கல்வி ஆண்டிலிருந்து துவங்கப்படும் என்றார்.
error: Content is protected !!