நாகர்கோவிலில்  தமிழ்நாடு மகளிர்  நல மேம்பாட்டு நிறுவனம்,  மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற  வேலைவாய்ப்புமுகாமில் 72 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஊரக பகுதிகளில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் பொருட்டு,வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதன்படி,  நாகர்கோவில், ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் நடைபெற்ற இம் முகாமில், வேலை வாய்ப்பற்ற 1480 இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
இதில் உள்ளூர் மற்றும் சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களிலிருந்து பன்னாட்டு நிறுவனங்கள் கலந்து கொண்டு 227 இளைஞர்களை  பணிக்கு தேர்வு செய்தனர். முகாமினை,  மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் வே.பிச்சை பார்வையிட்டு முதல்கட்டமாக 72 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி முதல்வர்  ஜெ.ஆர்.வி. எட்வர்ட், வேலைவாய்ப்பு அலுவலர் எம்.காளிமுத்து, பேராசிரியர்  யார்ட்லி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!