மார்த்தாண்டம்: நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பார்வதிபுரம் மற்றும் மார்த்தாண்டத்தில் புதிய மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. இதில் ₹142 கோடியில் நடந்துவந்த மார்த்தாண்டம் மேம்பால பணி தற்போது  முடியும் தருவாயில் உள்ளது. தென்னிந்தியாவிலேயே மிகவும் நீளமான, தமிழகத்திலேயே மிகவும் பெரிய இரும்பு பாலமாக தற்போது இது அமைந்துள்ளது. குழித்துறை தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் இருந்து மார்த்தாண்டம் பம்மம் வரை சுமார் 2.5 கி.மீ தூரத்திற்கு மேம்பாலம் உள்ளது. மேம்பாலத்தை தாங்கிப்பிடிக்கும் பில்லர்கள் அமைக்க 110 இடங்களில் துளையிட்டு, கான்கிரீட் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. மேம்பாலத்திற்காக அமைக்கப்பட்டுள்ள 110 ஸ்டீல் பில்லர்கள் சுமார் 2.5 முதல் 8.5 மீட்டர் உயரம் உடையவை. 2 பில்லர்களுக்கு இடையேயான தூரம் 24 மீட்டர்கள்.

பில்லர்களின் மேல் அமைந்துள்ள பீம்கள் 8.5 மீட்டர் நீளம் கொண்டவை. இவற்றில் மிக நீளமான பீம்கள் 47 மீட்டரில் ரயில்வே பாலம் அருகே அமைக்கப்பட்டுள்ளன. பாலத்தின் மேல் 11 மீட்டர் அகலத்தில் சாலை அமைந்துள்ளது. மேம்பால சாலையின் பக்கவாட்டு சுவர் 1.5 மீட்டர் உயரத்தில் உள்ளது. மேம்பால இரும்பு பில்லர்களின் உள்பகுதியில் தரைமட்டத்தில் இருந்து 2 மீட்டர் உயரத்துக்கு காங்கிரீட் கலவையால் நிரப்பப்பட்டுள்ளது.  இந்த நிலையில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நேற்று மேம்பாலம் மற்றும் கீழ்ப்பகுதியில் நடக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பொறியாளர்களிடம் வேலை விபரம் குறித்து கேட்டறிந்தார். பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்திய அவர் உரிய ஆலோசனைகளையும் வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பார்வதிபுரம் மேம்பாலத்தின் மேல்தளத்தில் பொதுமக்கள் நடந்து சென்று பார்வையிட்டு இயற்கை அழகை ரசிக்கும் வகையில் வரும் 15ம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை சுமார் 3 மணி நேரம் அனுமதி அளிக்கப்படுகிறது. அதுபோல 16ம் தேதி முதல் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்.  மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் ஏதாவது ஒரு தடத்திலாவது உடனடியாக சாலை சீரமைக்கப்பட்டு வாகன போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்படும். வணிகர்களின் சிரமங்களை குறைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். விரைவில் மார்த்தாண்டத்தில் போக்குவரத்து சகஜநிலையை எட்டும். அதற்கான முழு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார். பாமார்த்தாண்டம் மேம்பாலத்தில் 16ம் தேதி முதல் வாகன போக்குவரத்து: மத்திய அமைச்சர் தகவல்

மார்த்தாண்டம்: நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பார்வதிபுரம் மற்றும் மார்த்தாண்டத்தில் புதிய மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. இதில் ₹142 கோடியில் நடந்துவந்த மார்த்தாண்டம் மேம்பால பணி தற்போது  முடியும் தருவாயில் உள்ளது. தென்னிந்தியாவிலேயே மிகவும் நீளமான, தமிழகத்திலேயே மிகவும் பெரிய இரும்பு பாலமாக தற்போது இது அமைந்துள்ளது. குழித்துறை தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் இருந்து மார்த்தாண்டம் பம்மம் வரை சுமார் 2.5 கி.மீ தூரத்திற்கு மேம்பாலம் உள்ளது. மேம்பாலத்தை தாங்கிப்பிடிக்கும் பில்லர்கள் அமைக்க 110 இடங்களில் துளையிட்டு, கான்கிரீட் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. மேம்பாலத்திற்காக அமைக்கப்பட்டுள்ள 110 ஸ்டீல் பில்லர்கள் சுமார் 2.5 முதல் 8.5 மீட்டர் உயரம் உடையவை. 2 பில்லர்களுக்கு இடையேயான தூரம் 24 மீட்டர்கள்.

பில்லர்களின் மேல் அமைந்துள்ள பீம்கள் 8.5 மீட்டர் நீளம் கொண்டவை. இவற்றில் மிக நீளமான பீம்கள் 47 மீட்டரில் ரயில்வே பாலம் அருகே அமைக்கப்பட்டுள்ளன. பாலத்தின் மேல் 11 மீட்டர் அகலத்தில் சாலை அமைந்துள்ளது. மேம்பால சாலையின் பக்கவாட்டு சுவர் 1.5 மீட்டர் உயரத்தில் உள்ளது. மேம்பால இரும்பு பில்லர்களின் உள்பகுதியில் தரைமட்டத்தில் இருந்து 2 மீட்டர் உயரத்துக்கு காங்கிரீட் கலவையால் நிரப்பப்பட்டுள்ளது.  இந்த நிலையில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நேற்று மேம்பாலம் மற்றும் கீழ்ப்பகுதியில் நடக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பொறியாளர்களிடம் வேலை விபரம் குறித்து கேட்டறிந்தார். பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்திய அவர் உரிய ஆலோசனைகளையும் வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பார்வதிபுரம் மேம்பாலத்தின் மேல்தளத்தில் பொதுமக்கள் நடந்து சென்று பார்வையிட்டு இயற்கை அழகை ரசிக்கும் வகையில் வரும் 15ம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை சுமார் 3 மணி நேரம் அனுமதி அளிக்கப்படுகிறது. அதுபோல 16ம் தேதி முதல் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்.  மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் ஏதாவது ஒரு தடத்திலாவது உடனடியாக சாலை சீரமைக்கப்பட்டு வாகன போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்படும். வணிகர்களின் சிரமங்களை குறைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். விரைவில் மார்த்தாண்டத்தில் போக்குவரத்து சகஜநிலையை எட்டும். அதற்கான முழு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார். பாஜ மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், உண்ணாமலைக்கடை பேரூராட்சி முன்னாள் தலைவர் ஜெயசீலன், நகர பாஜ தலைவர் பக்தசிங் உட்பட பலர் உடன் இருந்தனர்.ஜ மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், உண்ணாமலைக்கடை பேரூராட்சி முன்னாள் தலைவர் ஜெயசீலன், நகர பாஜ தலைவர் பக்தசிங் உட்பட பலர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!