வருமான வரி கணக்கு தாக்கல் தொடர்பான அனைத்து விசாரணைகளையும் மின்னஞ்சல் மூலமாக மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது.

 

வரும் 2016 – 2017 நிதியாண்டு முதல் இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக வருமான வரித் துறை அறிவித்துள்ளது. வருமான வரி தாரர்கள் மின்னஞ்சலில் பதில்களை அளிப்பது மூலம் அவர்களுக்கு தேவையற்ற சிரமங்கள் குறையும் என வருமான வரித் துறை தெரிவித்தள்ளது.

 

மேலும் வருமான வரித் துறையில் நடக்கும் ஊழல்களை கட்டுப்படுத்துவதற்கும் இது உதவும் என அத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பான சோதனை முயற்சி சென்னை உள்ளிட்ட 5 மாநகரங்களில் ஏற்கனவே வெற்றிகரமாக நடந்து வருவதாகவும் வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

 

இதற்கிடையில் இணையதள வழியில் தாக்கல் செய்யப்பட்ட 50 லட்சம் வருமான வரி கணக்குகள் இதுவரை மின்னணு முறையில் சரிபார்க்கப்பட்டுள்ளதாகவும் அத்துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!