பீஜிங் : வேகமாக வளரும் சீன நகரமான சென்ஜென், அண்மையில் ஒரு சத்தமில்லாத புரட்சியை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. அதன், 16 ஆயிரம் அரசுப் பேருந்துகளும், இப்போது மின்சாரப் பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ளன. இம்மாத இறுதிக்குள், சென்ஜென்னில் ஓடும், 22 ஆயிரம் வாடகை கார்களும் மின் மயமாக்கப்பட்டுவிடும்.

நகரில் ஒலி மாசு உடனடியாக குறைந்திருப்பதோடு, 48 சதவீத கரியமில வாயு மாசு குறைந்திருக்கிறது. சீனாவின் காற்று மாசு குறைந்த நகரமாக, சென்சென் உருவெடுத்திருக்கிறது. மின் பேருந்துகளுக்கு, மின்னேற்றம் செய்ய, 180 டிப்போக்களையும் சென்ஜென் போக்குவரத்துக் கழகம் அமைத்திருக்கிறது. இதில், ஒரு டிப்போவில், ஒரே நேரத்தில், 20 பேருந்துகளுக்கு, ‘சார்ஜ்’ போட்டுக் கொள்ளலாம்.

டீசல் புகையை கக்கியபடி, பெருத்த சத்தத்துடன் ஓடிக்கொண்டிருந்த பேருந்துகளை, இப்போது அங்கு பார்க்க முடியாது. இதனால், பொது போக்குவரத்தை முழுவதும், மின் மயமாக்கிய முதல் நகரம் என்ற பெருமை சென்ஜென்னுக்கு, கிடைத்திருக்கிறது.

error: Content is protected !!