தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வியாழக்கிழமை புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால் அடுத்த இரு நாள்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழைப் பொழிவைப் பொருத்தவரை தமிழகத்தின் அநேக இடங்களில் பரவலான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் ஓரிரு இடங்களில் மழை பொழிவு இருக்கும் என்றும் வானிலை மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் 80 மில்லி மீட்டரும், தாமரைப்பாக்கத்தில் 50 மில்லி மீட்டரும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், புதிய காற்றழுத்தத் தாழ்வு குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் புதன்கிழமை கூறியது:
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலான மழை இருக்கும். தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகக் கூடும் புதிய தாழ்வு பகுதியால் 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை இருக்கும். கடலில் காற்றின் வேகம் அதிகம் இருப்பதால் அடுத்த இரு நாள்களுக்கு குமரி, மன்னார் வளைகுடா, தென் மேற்கு வங்கக் கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

error: Content is protected !!