டில்லி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு அளித்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த மே மாதம் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரிக்கை விடுத்து தூத்துக்குடியில் போராட்டம் நடந்தது. அப்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். ஏராளமோனோர் துப்பாக்கி சூட்டிலும் தடியடியிலும் காயம் அடைந்தனர். அதன் பிறகு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டு ஆலைக்கு சீல் வைத்தது.

ஆலை நிர்வாகம் இதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு அளித்தது. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள பசுமை தீர்[பாயம் அனுமதி அளித்தது. அத்துடன் இந்த விவகாரத்தில் மேகாலயா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு ஆய்வுக் குழு அமைத்து அந்தக் குழுவி அறிக்கையை குறித்து முடிவு எடுக்கபடும் என உச்சநீதிமன்றம் திர்ப்பளித்தது.

கடந்த செப்டம்பர் மாதம் இதை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனுவை தாக்கல் செய்தது. முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு தனது அறிக்க்கையை இன்று பசுமை தீர்ப்பாயத்திடம் அளித்தது. அதை ஒட்டி தமிழக அரசின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன் பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடை கோரி தமிழக அரசு அளித்த சீராய்வு மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

error: Content is protected !!