அரசு பள்ளியில் பயிலும் 11 லட்சம் மாணவர்களுக்கு “டேப்” வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் முதன்முறையாக மாணவர்களின் முகங்களோடு கூடிய வருகைப்பதிவேடு, சென்னை அசோக் நகர் அரசுப்பள்ளியில் அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

அதன் பின் அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில்,
அரசு பள்ளியில் பயிலும் 11 லட்சம் மாணவர்களுக்கு “டேப்” வழங்கப்படும்.அரசு பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டில் 4 வகையான வண்ண சீருடைகள் அறிமுகம் செய்யப்படுகிறது.
மாணவர்களின் முகங்களோடு கூடிய வருகைப்பதிவேடு சென்னையில் முதல்கட்டமாக தொடங்கப்பட்டுள்ளது .படிப்படியாக அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.அடுத்த மாதம் இறுதிக்குள் ஸ்மார்ட் கார்டு வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். (News from www.dailyhunt.com)

error: Content is protected !!