2-ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என மத்திய அரசு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை வெளியிட்ட அரசாணை:

மத்திய அரசின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப கற்பித்தல் முறை, புத்தக பைகளின் சுமை ஆகியவற்றை மாநில அரசுகள் ஒழுங்குமுறைபடுத்த வேண்டும்.

ஒன்றாம், இரண்டாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு கண்டிப் பாக வீட்டுப் பாடங்கள் கொடுக்கக்கூடாது. மேலும் மொழி, கணிதம் தவிர இதர பாடங்களைப் பரிந்துரைக்கக்கூடாது.

மூன்றாம், நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு மொழிப்பாடங் கள், இவிஎஸ், கணிதம் ஆகிய வற்றை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும். கூடுதலாக புத்தகங் கள், இதர கல்வி உபகரணங்களை பள்ளிக்கு எடுத்து வரச் சொல்லக் கூடாது. இதனால் புத்தக பைகளின் சுமை அதிகரிக்கக்கூடும்.

ஒன்றாம், இரண்டாம் வகுப்பு மாணவ, மாணவியரின் புத்தக பையின் எடை 1.5 கிலோவை தாண்டக்கூடாது. மூன்றாம், நான்காம் வகுப்புக்கு புத்தக பையின் எடை 2 கிலோ முதல் 3 கிலோ வரை இருக்கலாம்.

5, 6-ம் வகுப்புக்கு 4 கிலோ, 8, 9-ம் வகுப்புக்கு 4.5 கிலோ, 10-ம் வகுப்புக்கு புத்தக பையின் சுமை 5 கிலோவை தாண்டக்கூடாது.

இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!