சென்னை, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான நேரம், மூன்றே கால் மணி நேரத்தில் இருந்து, தற்போது, இரண்டே முக்கால் மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஒவ்வொரு பாடத்துக்கும், இரண்டரை மணி நேரம் தான் தேர்வு நடக்க உள்ளது. இந்த அறிவிப்பு, கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே வெளியிடப்பட்டாலும், தேர்வு நெருங்குவதால், தற்போதும் மாணவர்களுக்கு அறிவுறுத்தும்படி, பள்ளிகளுக்கு, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.அவரின் சுற்றறிக்கை விபரம்:காலை நேரத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, 10:00 முதல், 12:45 மணி வரையிலும், பிற்பகலில் எழுதும் மாணவர்களுக்கு, 2:00 முதல், 4:45 மணி வரையிலும் தேர்வு நடக்கும் பழைய தேர்வு முறையில், பிளஸ் 2 தேர்வு எழுதும், தனி தேர்வர்களுக்கு, காலை, 10:00 முதல், 1:15 மணி வரை, மூன்றே கால் மணி நேரம் தேர்வு நடக்கும். ஆனாலும், இவர்களுக்கு மொழிப்பாட தேர்வுகள் மட்டும், 2:45 மணி நேரம் தான் நடக்கும் அனைத்து மாணவர்களுக்கும், தேர்வு நேரத்தில் முதல், 15 நிமிடங்கள், தேர்வர்களின் விபரங்களை பூர்த்தி செய்யவும், வினாத்தாளை படித்து பார்க்கவும் ஒதுக்கப்படும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!