2018ம் ஆண்டின் சிறந்த சொல் இதுவா..?? பிரம்மிக்கச் செய்த ஆக்ஸ்போர்டு அகராதி

இந்தாண்டின் சிறந்த சொல்லை ஆக்ஸ்போர்டு அகராதி வெளியிட்டுள்ளது, அதுகுறித்த தகவல்களை தற்போது பார்க்கலாம்

oxford dictionary says toxic is the word of the year

ஆக்ஸ்போர்டு அகராதியின் இந்தாண்டின் சிறந்த சொல் இதுதான்
ஆக்ஸ்போர்டு அகராதிஇந்தாண்டின் சிறந்த சொல்லாக ’டாக்ஸிக்’ என்கிற ஆங்கில வார்த்தையை வெளியிட்டுள்ளது. இதற்கு தமிழில் நஞ்சு என்று பொருள்.

ஆக்ஸ்போர்டு அகராதி, கடந்த 11 ஆண்டுகளாக ஆண்டின் சிறந்த சொற்களை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் இந்தாண்டிற்கான சிறந்த சொல் வெளியிடப்பட்டுள்ளது.

சர்வதேசளவில் இந்தாண்டின் சிறந்த சொல்லாக toxic என்கிற வார்த்தையை தேர்வு செய்துள்ளதாக ஆக்ஸ்ர்போர்டு அகராதிக்காக வார்த்தையை சேகரிக்கும் தேர்வு குழு அறிவித்துள்ளது.

17ம் நூற்றாண்டின் போது லத்தீன் மொழியில் இருந்து, ஆங்கிலத்திற்கு பெறப்பட்ட வார்த்தை தான் ‘டாக்ஸிக்’. தீயனவற்றை குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது. இதற்கு தமிழில் நஞ்சு என்பது சரியாக பொருள்.

இந்தாண்டு இந்த வார்த்தையைப் பற்றி அதிகம் பேர் விவாதித்துள்ளனர். அதன் காரணமாகவே, இந்தாண்டில் சர்வதேசளவில் சிறந்த சொல்லாக ஆக்ஸ்போர்டு தேர்வு செய்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

error: Content is protected !!