ஸ்ரீஹரிகோட்டா : 31 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி சி 43 நாளை விண்ணில் பறக்கிறது… பறக்கிறது.

வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் உள்பட 31 செயற்கைக்கோள்களை தாங்கியபடி பிஎஸ்எல்வி சி 43 ரக ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ளது.


வேளாண்மை, வனப்பகுதி, கடலோர பகுதி, உள்நாட்டு நீர் நிலைகள், மண்வளம் மற்றும் ராணுவ உளவுப் பணிக்காக ஹைபர்ஸ்பெக்ட்ரல் இமேஜிங் (Hyperspectral Imaging) என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கியுள்ளது.


இதனுடன் வெளிநாடுகளைச் சேர்ந்த 30 சிறிய மற்றும் நானோ செயற்கைக்கோள்களும் பிஎஸ்எல்வி சி43 ராக்கெட் மூலம் நாளை (நவ.,29) காலை 9.58 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளன. இவற்றில் 23 செயற்கைக்கோள்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவை.

இதனையடுத்து பி.எஸ்.எல்.வி. சி 43 ராக்கெட்டில் ஏவுவதற்கான பணிகள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் நடைபெற்று வருகின்றன. இதற்கான 28 மணி நேர கவுண்ட் டவுன் இன்று காலை 5.58 மணிக்கு துவங்கி உள்ளது. (News From https://m.dailyhunt.in)

error: Content is protected !!